இந்தியா

கங்கை நதியில் துப்பினால் சிறை

செய்திப்பிரிவு

கங்கை நதியில் எச்சில் துப்புவது, குப்பையை கொட்டி மாசுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 நாள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கங்கையை சுத்தப்படுத்தும் மோடி அரசின் திட்டங்களில் இந்த நடவடிக்கையும் ஒன்றாக கருதப்படுகிறது. கங்கை நதியை தூய்மையாக பாதுகாப்பது மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்களில் ஒன்று. இதனால் மற்ற நதிகளை நாங்கள் கண்டுகொள்ளவில்லை என்பது அர்த்தமல்ல.

நதியை தூய்மைப்படுத்துதலில் முன்மாதிரியை உருவாக்குவோம். பின்னர் அதனை அனைத்து நதிகளிலும் செயல்படுத்துவோம் என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT