இது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பற்றிய செய்தி. குறிப்பாக பிரதமர் மோடியை காண்பதற்கு கூடும் வெளிநாட்டு இந்தியர்களை பற்றியது.
நமது காலகட்டத்தில் மிக புத்திசாலித்தனமான அரசியல் வாதி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை தேடித்தேடி சந்திக் கும் தலைவர் மோடி. இதற்கு முன்னர் வேறு எந்த தலைவர்களும் அப்படி செய்ததில்லை.
பிரதமரான பிறகு இந்தியாவை விட்டு எந்த வெளிநாட்டுக்கு மோடி சென்றாலும் சீனா, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் எதுவாக இருந் தாலும் அங்குள்ள இந்தியர்களை சந்திப்பதில் அதீத ஆர்வம் காட்டு கிறார். அதேபோல் மோடியை காண வெளிநாட்டு இந்தியர்கள் கூட்டமாக வருவதும் வழக்கமாகி விட்டது.
அந்த சந்திப்பை நமது மீடியாக் கள் அலங்காரப்படுத்தி செய்தி வெளியிடுகின்றன. ஒரு நடிகருக்கு கிடைக்கும் வரவேற்பை போல் மோடிக்கு வெளிநாட்டினரிடம் வர வேற்பு கிடைக்கிறது. இதன் பொருள் என்ன?
கவர்ச்சி, செல்வாக்கால் நடிக ருக்கு பெரும் வரவேற்பு கிடைக் கிறது. அந்த வரவேற்பு சம்பந்தப் பட்ட நடிகரின் உயர் குணங்களுக் காகவோ அல்லது மனிதநேயத்துக் காகவோ அல்ல. பொதுமக்களிடம் அவர்கள் உருவாக்கி உள்ள ஒரு ‘போலி ஹீரோயிசம்’. அது நடிகரின் ஒப்பனைக்காகவும், மேலோட்ட மாகவும் வழங்கப்படும் வரவேற்பு.
அதுபோல் நடை, உடை, பாவனை, பேச்சு போன்றவற்றை வெளிப்படுத்தும் தலைவருக்கு இதுபோன்ற வரவேற்பு ஆரம்பத் தில் கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை. மேலும் அந்த வரவேற்பு நிரந்தரமற்றது. ராக் ஸ்டார்களுக் கும், நடிகர்களுக்கும் கிடைக்கும் அமோக வரவேற்பு குறிப்பிட்ட காலம் வரைதான். அதை விட்டு விடுவோம். இங்கு மோடியை பற்றி பேசவில்லை. நான் கூறுவது வெளிநாடுகளில் வாழும் இந்தியர் களைப் பற்றியது. மோடியை சந்திக்கும் வெளிநாட்டினர் பற்றியது. அதை பற்றி பார்ப்போம்.
முதலாவது மற்றும் முக்கிய மான விஷயம்.. மற்ற நாட்டினரை விட இந்தியர்கள் அதிக தேசப் பற்று கொண்டவர்கள். தாய் நாட்டை பற்றி பாட்டு போட்டால் கூட உடனே கண்ணீர் சிந்தக் கூடிய வர்கள். மேற்கத்திய நாடுகளில் இந்தியர்கள் பல தலைமுறை களாக செட்டிலாகி வருகின்றனர்.
எனினும் இந்தியாவுடன் தங் களை அடையாளப்படுத்தி கொள்ப வர்கள். அவர்கள் குடியேறிய நாட்டு அணியினர் இந்திய அணியினரு டன் விளையாடினால் கூட, அங்கு கூட்டமாக கூடி இந்திய அணிக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
இரண்டாவது, வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுக்கு உள்ள குற்ற உணர்வு. உதாரணத்துக்கு இந்தியாவில் அரசு மானிய கட்ட ணத்தில் படித்து டாக்டர்களாகவும் இன்ஜினீயர்களாகவும் ஆன பிறகு சம்பாதிக்க வெளிநாட்டில் குடி யேறியவர்கள்.
இப்படி இந்தியாவில் படித்து விட்டு வெளிநாட்டில் குடியேறிய பலருக்கு குற்ற உணர்வு இருக் கிறது. மோடி போன்ற தலைவர் களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள் வது இந்தியன் என்ற உணர்வில் அவர்களுக்கு ஒரு திருப்தி.
மூன்றாவது, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு உள்ள தாழ்வு மனப்பான்மை. அவர்கள் காட்டும் ஒற்றுமை, கூட்டம் கூடுதல் போன்றவற்றை அவர்கள் தங்கள் வாழ்க்கையை விட மிக முக்கியமாக கருதுகின்றனர்.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இந்தியன் என்ற உணர்வை அவர்களுக்கு அளிக் கிறது. ஏனெனில், எந்த நாட்டில் குடியேறி இருக்கிறார்களோ அந் நாட்டு மக்களுடன் இந்தியர்களால் ஒன்றிப்போக முடிவதில்லை. குறிப்பாக அவர்கள் கலாச்சாரத்தை முழுவதுமாக பின்பற்ற முடியாமல் இந்தியர்கள் உள்ளனர்.
உதாரணத்துக்கு படேல் சமூகத்தினரை எடுத்துக் கொள் கின்றனர். அவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் மோட்டல் (உணவகம்) தொழில்தான் செய் கின்றனர். ஏன் படேல் சமூகத்தினர் மோட்டல் தொழிலுக்கு முன்னு ரிமை தருகின்றனர்? என் உறவி னர்கள் பலர் வெளிநாடுகளில் இந்த தொழிலில் உள்ளனர். மோட்டல் நடத்துவதற்கு அமெரிக் கர்களுடன் கலந்து வாழ தேவை யில்லை. கேஷ் கவுன்டருடன் அவர் களுடனான உறவு முடிந்துவிடும். ஆனால், சமையல் அறையில் ‘கதி கிரேவி’ கொதித்து கொண்டி ருக்கும். வரவேற்பறையில் தொலைக்காட்சியில் ராமாயணம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
வெளிநாடுகளில் வாழும் குஜராத்திகள் ஒரு குழுவாக இருக் கின்றனர். பண்டிகை நாட்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் ஒரு படேல், இன்னொரு படேலை சந்திக்கும் போது எல்லையில்லா ஆனந்தம் அடைகிறார்.இதே நிலையில்தான் மற்ற சமூகத்தினரும் ஒருவரை ஒருவர் வெளிநாடுகளில் சந்திக்கும் போது பரவசம் அடைகின்றனர். இந்தச் சூழ்நிலையில் மோடி போன்ற தலைவர்களின் நிகழ்ச்சி யில் இந்தியர்கள் உற்சாகமாகவும் பெரும் சக்தியுடனும் கூடுகின்றனர்.
இந்தச் சக்தியால் விளைந்த பயன் என்ன? நிகழ்ச்சி முடிந்த பிறகு நடிகர் சென்று விட்டால் அங்கு கூடியிருந்தவர்களின் ஒற்றுமை, அர்த்தம் எல்லாம் போய்விடும். அதுபோன்றதுதான் மோடியை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சந்திப்பதும், இந்தியர்களை மோடி சந்திப்பதும். உண்மை என்னவென்றால் அது ஒரு பொழுதுபோக்கு.