கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பல்வேறு முக்கிய மைல்கல் சாதனைகளைப் படைத்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 161 நாட்களுக்கு பிறகு 22,100-க்கும் கீழ் குறைவாக 22,065-ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை 7-ம் தேதி 22,252 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது.
நோய் தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து, உயிரிழப்புகள் குறைந்து வருவதால் நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகின்றது.
நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3.4 லட்சத்திற்கும் கீழாக 3,39,820 ஆக பதிவாகியுள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 3.43 சதவீதமாகும்.
குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94 லட்சத்தைக் கடந்துள்ளது (94,22,636). தற்போது சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் குணமடைந்தோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 90,82,816 ஆக உள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் வீதம் 95.12 ஆக உயர்ந்துள்ளது. இது உலகளவில் அதிகமான ஒன்று.
கடந்த 24 மணி நேரத்தில் 34,477 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதே காலகட்டத்தில் 354 பேர் உயிரிழந்துள்ளனர்.