சர்தார் பட்டேலின் நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவிற்கு வலிமையான, ஒளிமிக்க அடித்தளத்தை அமைத்துத் தந்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, அவரது நினைவு நாளில், மரியாதை செலுத்துகிறேன்.
நமது நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அவர் பாதை வகுத்தார். அவரது பணி என்றும் நம்மை ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.