இந்தியா

கரோனா: இந்தியாவில் 15.55 கோடி மாதிரிகள் பரிசோதனை

செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸ் பரிசோதனையை பொறுத்தவரையில் 15,55,60,655 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,065 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 99,06,165 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தில் 3-வது முறையாக நாள்தோறும் கரோனாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 94,22,636 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34,477 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,39,820 லட்சமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 354 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 1,43,709 ஆக அதிகரித்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 15,55,60,655 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 9,93,665 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT