இந்தியா

உத்தர பிரதேசத்தில், சாக்கடையில் பஸ் விழுந்ததில் 12 பேர் பலியாகினர்

செய்திப்பிரிவு

புதன்கிழமையன்று உத்தர பிரதேசத்தில் உள்ளா உசாசியா கிராமத்தின் சாக்கடையில் பேருந்து ஒன்று விழுந்ததில் 12 பேர் பலியாகினர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது பற்றி போலீஸார் கூறுகையில், "பேருந்தில் 96 பயணிகள் இருந்தனர். பஹரசிலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருக்கையில் 24ஆம் தேசிய நெடிஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 12 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்தனர். 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT