இந்தியா

தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் மரணம்

செய்திப்பிரிவு

தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல நகைச்சுவை நடிகர் ‘கள்ளு’ சிதம்பரம் (70) உடல் நலக்குறை வால் நேற்று விசாகப்பட்டினத்தில் மரணமடைந்தார்.

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (70). நாடகங்களில் நடித்து வந்த இவர், 1989ம் ஆண்டில் ‘கள்ளு’ (கண்கள்) எனும் தெலுங்கு படத்தில் நடித்தார். இப்படத்துக்கு இவருக்கு ஆந்திர அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருது வழங்கப்பட்டது. இவர், சுமார் 300க்கும் மேற்பட்ட படங் களில் நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான அம்மோரு (தமிழில் அம்மன்) படத்தில் நடித்துள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு தனது அக்கா வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT