பிரபல கேலி சித்திர ஓவியர் (கார்ட்டூனிஸ்ட்) மறைந்த ஆர்.கே.லட்சுமணின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று அவரது புகழ்பெற்ற ‘தி காமன் மேன்’ கேலிச் சித்திரத்தை ‘டூடுள்’ போட்டு கவுரவித்தது கூகுள் இணையதளம்.
கறுப்பு வெள்ளையில் காணப்பட்ட அந்த கேலிச் சித்திரம், லட்சுமணின் கைவண்ணத்தில் வரையப்பட்டதுபோலவே காட்சி அளித்தது. இந்த சித்திரம், லட்சுமண் பணியாற்றும் மேஜை, நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தி காமன் மேன் கேலி சித்திரத்தை வரையும்போது சாதாரண மனிதர் ஒருவர் எட்டிப்பார்ப்பது மற்றும் பல்வேறு ஓவியங்களின் தொகுப்பு அடுக்கி வைத்திருப்பது என மூன்று பகுதிகளைக் கொண்ட ஒரு ஓவியரின் அறையை சித்தரிப்பது போல இருந்தது.
அந்த டூடுளை கிளிக் செய்தபோது, லட்சுமணின் படைப்புகள் மற்றும் அவருடன் தொடர்புடைய எண்ணற்ற இணையதளங்கள் பட்டிலிடப்பட்டிருந்தன.
கடந்த 1921 அக்டோபர் 24-ம் தேதி பிறந்த லட்சுமண் உடல்நலக்குறைவு காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி புணே மருத்துவமனையில் காலமானார்.