ரோத்தங் கணவாயில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான குகைப் பாதையில் பிரதமர் மோடி.(கோப்புப் படம்) 
இந்தியா

லடாக்கில் அடல் குகைப் பாதையை காண மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்: பல்கலைக்கழக மானியக் குழு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

இமாச்சல் மணாலியில் இருந்து - லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அடல் குகைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 9 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த குகைப் பாதை உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமானது.

இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர், கல்லூரி முதல்வர்களுக்கு யுஜிசி செயலர் ரஜ்னீஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்த குகைப் பாதையானது நமது நாட்டின் தொழில்நுட்பத்துக்கு ஒரு கிரீடம் போன்றது. மிகச்சிறந்த பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டுள்ளது. இதை பொறியியல் கல்லூரி மாணவர்கள் பார்த்து பயன் அடைய வேண்டும். இதனால் அவர்கள் இப்பகுதிக்கு சுற்றுலா செல்வதை ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT