திருமலை: திருப்பதி லட்டு பிரசாதம் வழங்குவதாகக் கூறி பணம் வசூலித்த போலி இணையதளத்தை தேவஸ்தானம் முடக்கி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் லட்டு பிரசாதத்தை உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கிறோம் என போலி இணைய தளம் உருவாக்கப்பட்டிருந்தது. www.balajiprasaddam.com எனும் இணையதளம் வழியாக பல பக்தர்கள் பணம் செலுத்தி ஏமாந்து வந்தனர்.
இதுகுறித்து சிலர் புகார் தெரிவித்ததால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி இந்த போலி இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார். அதன்படி தேவஸ்தான கண்காணிப்பு பிரிவினர், இந்த இணையதளத்தை முடக்கினர். மேலும், திருமலையில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.