பிரிட்டன் எழுத்தாளரும், பெண் ணுரிமைப் போராளியுமான அன்னி பெசன்ட்டின் 168-வது பிறந்தநாளையொட்டி, டூடுள் போட்டு பெருமைப்படுத்தியுள்ளது கூகுள்.
மூத்த வயதில் நாற்காலியொன் றில் அன்னி பெசன்ட் அமர்ந்திருப் பது போன்று கூகுள் தன் முதல் பக்கத்தில் ஓவியம் அமைத்துள்ளது.
இளம் பச்சை-நீலப் பின்னணி யில் நாற்காலியில் அமர்ந்திருக் கும் அன்னி பெசன்ட் கையில் நியூ இண்டியா செய்தித்தாளை கையில் வைத்துள்ளார். அவர் அந்த இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய சுயாட்சியை வலியு றுத்தி ஹோம்ரூல் இயக்கத் தைத் தொடங்கிய அன்னி பெசன்ட், 1917-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றார்.