இந்தியா

நிதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டை ஊக்குவிப்பதில் அரசு ஆர்வம்: மத்திய அரசு

செய்திப்பிரிவு

நிதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டை ஊக்குவிப்பதில் அரசு ஆர்வம் கொண்டு இருப்பதாக : மத்திய அரசு நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கே. ராஜாராமன் தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்களுடன் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஐக்கிய நாடுகளில் இயங்கும் பெட்டர் தன் கேஷ் அலையன்ஸ் அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் கோவிட்-19 காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் அபரிமித பயன்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பிளாக்செயின், மெஷின் லர்னிங் போன்ற நிதித்துறை சார்ந்த தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதில் இந்திய அரசு முனைப்புடன் இருப்பதாக நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கே. ராஜாராமன் தெரிவித்தார்.

ஜன்தன்- ஆதார்- மொபைல் (ஜாம்) உள்ளிட்ட இந்திய அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனைத் திட்டங்கள் பெருந்தொற்றின் போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.

SCROLL FOR NEXT