இந்தியா

தேசிய தண்ணீர் விருதுகள் 2020; விண்ணப்பம்: ஜல்சக்தி அமைச்சகம்  வரவேற்பு

செய்திப்பிரிவு

தேசிய தண்ணீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை ஜல்சக்தி அமைச்சகம் வரவேற்கிறது.

நீர்வள மேலாண்மையில் சிறப்பான பங்கை ஆற்றி வரும் தனிநபர்களையும், அமைப்புகளையும் ஊக்குவித்து அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தில், தேசிய தண்ணீர் விருதுகள் 2020-க்கான விண்ணப்பங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வரவேற்றுள்ளது.

ஜல்சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், ஆறுகள் மேம்பாடு, கங்கை புத்தாக்கத் துறை உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் தேசிய தண்ணீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. அவை பின்வருமாறு:

1) சிறந்த மாநிலம்,

2) சிறந்த மாவட்டம் (ஐந்து மண்டலங்களுக்கு தலா இரண்டு விருதுகள், மொத்தம் 10 விருதுகள்),

3) சிறந்த கிராமப் பஞ்சாயத்து (ஐந்து மண்டலங்களுக்கு தலா மூன்று விருதுகள், மொத்தம் 15 விருதுகள்),

4) சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு

5) சிறந்த ஊடகம் (அச்சு மற்றும் மின்னணு)

6) சிறந்த பள்ளி

7) வளாகப் பயன்பாட்டுக்காக சிறந்த நிறுவனம்/குடியிருப்போர் நல சங்கம்/ஆன்மிக அமைப்பு

8) சிறந்த தொழிற்சாலை

9) சிறந்த அரசு சாரா அமைப்பு

10) சிறந்த நீர் பயனர் சங்கம்

11) பெருநிறுவன சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளுக்கான சிறந்த தொழிலகம்

SCROLL FOR NEXT