இந்தியா

நல்ல துறை கிடைக்கும் ஆறுதலுடன் கனரகத் துறையை ஏற்றது சிவசேனை

செய்திப்பிரிவு

சிவசேனை கட்சியைச் சேர்ந்த ஆனந்த் கீதே, தனக்கு ஒதுக்கப்பட்ட கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங் கள் அமைச்சர் பொறுப்பை நேற்று ஏற்றுக்கொண்டார்.

அமைச்சரவை மாற்றத்தின் போது தங்கள் கட்சிக்கு நல்ல துறை ஒதுக்கப்படும் என்ற அவர் கூறினார்.

பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனை அமைச்சரவையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையை ஏற்றுக் கொள்ள மறுத்து அதிருப்தி தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. பின்னர் சமரசம் ஏற்பட்டது.

இதையடுத்து டெல்லியில் நேற்று ஆனந்த் கீதே தனக்கு ஒதுக்கப்பட்ட கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங் கள் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியுடன் அமைச்சரவை குறித்துப் பேசினார். இதில் திருப்திகரமான முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவை மாற்றத்தின்போது முக்கியத்துவம் வாய்ந்த நல்ல அமைச்சர் பொறுப்பு எங்கள் கட்சிக்கு வழங்கப்படும்.

அமைச்சரவை ஒதுக்கப் பட்டத்தில் எங்கள் கட்சி அதிருப்தியடைந்ததாக வெளியான தகவல்கள் உண்மையில்லை.

மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக மக்க ளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அமைச்சக பொறுப்பு எனக்கு வழங்கப்படும் என்று உத்தவ் தாக்கரே எதிர்பார்த்தார் என்றார் ஆனந்த் கீதே.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி சிவசேனை. அக்கட்சிக்கு 18 எம்.பி.க்கள் உள்ளனர்.

SCROLL FOR NEXT