இந்தியா

முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இன்று அமைச்சரவை கூட்டம்

செய்திப்பிரிவு

மத்திய அரசு தரப்பில் ஆரம்பத்தில் 40 விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. தற்போது 14 விவசாய சங்கங்கள் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுகின்றன.

இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடம் ஆதரவு திரட்டும் முயற்சியை ஆளும் பாஜக தீவிரப்படுத்தி உள்ளது.

பாஜக ஆளும் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த சில சங்கங்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஹர் கிஸான் என்ற சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு ஆதரவு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த சங்கத்தில் சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் போராட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT