குடும்ப வன்முறை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி, ஜாமீன் கோரி டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சோம்நாத் பாரதி தரப்பில், “இது உறவுகளுக்கு இடையே ஏற்பட்ட வழக்கு. ஆனால், அரசியல் காரணமாக பெரிதாக வெடித்து விட்டது. இதன் பின்னணியில் பாஜக உள்ளது. நான் ஒரு எம்எல்ஏ. எனது தொகுதியில் பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. எனக்கு ஜாமீன் கொடுத்தால், நீதியை விட்டு தப்பிவிடமாட்டேன். என்னை அனைவரும் அறிவார்கள் என்பதால், எங்கும் தப்பிவிடமுடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சோம்நாத் பாரதி செல்வாக்கு மிக்கவர் என்பதால், வழக்கு விசாரணைக்கு அவர் குந்தகம் விளைவிப்பார் எனக் கூறி காவல் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அனில் குமார், தீர்ப்பை புதன்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தார்.