ஜல் ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக மத்திய குழு ஆந்திரா பயணம் மேற்கொண்டுள்ளது.
அனைத்து வீடுகளுக்கும் 2023-24-ஆம் ஆண்டுகள் குடிதண்ணீர் இணைப்புகளை வழங்கும் லட்சியத்தை எட்டுவதை உறுதி செய்யும் நோக்கில், ஜல் ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக மத்திய குழு ஒன்று ஆந்திரப் பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
2020 டிசம்பர் 2 முதல் 5 வரை ஆந்திரப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்ளும் ஆறு பேர் கொண்ட இந்த குழு, ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகளை மாநிலத்துக்கு வழங்கும்.
தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தை சேர்ந்த இக்குழுவினர், குடிதண்ணீர் திட்டங்களை செயல்படுத்தும் கள அலுவலர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், மாவட்ட குடி தண்ணர் மற்றும் சுகாதார இயக்கத்தின் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரிடம் உரையாடுவார்கள்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மத்திய குழுவினர் பயணம் மேற்கொள்கிறார்கள்.
2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாய் இணைப்பை உறுதி செய்வதை ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது.