டெல்லி எல்லையில் பொழுதுப்போக்குக்காக டிராக்டரில் டிஜே இசைக்குழுவை ஏற்பாடு செய்திருந்த விவசாயிகள். 
இந்தியா

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் இசைக்குழு ஏற்பாடு

செய்திப்பிரிவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி கடந்த வாரம் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். ஹரியாணா, பஞ்சாப், உ.பி., மகாராஷ்டிரா, சண்டிகர் விவசாயிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லி மற்றும் ஹரியாணாவுக்கு இடையிலான சிங்கு எல்லை பகுதியில் ஒரு டிராக்டரில் டிஜே இசைக் குழுவை ஏற்பாடு செய்து ஆட்டம், பாட்டத்துடன் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதுகுறித்து ஒரு விவசாயி கூறும்போது, “டெல்லி சலோ போராட்டத்தில் பல நாட்களாக நாங்கள் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கு வேறு எந்த பொழுதுப்போக்கு நிகழ்ச்சியும் இங்கு இல்லை. எனவே டிராக்டரில் டிஜே இசைக் கருவிகளை பொருத்திக் கொண்டு பொழுதைப் போக்கி வருகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.

SCROLL FOR NEXT