தினேஷ் குண்டு ராவ். 
இந்தியா

பாஜகவினர் பலர் ரஜினியோடு தற்போது இணைந்துள்ளனர்: காங்கிரஸ் கருத்து

செய்திப்பிரிவு

பாஜகவினர் பலர் ரஜினியோடு இணைந்துள்ளனர் என்பதைத் தவிர வேலைத்திட்டம், தேர்தல் பாதை, அமைப்பின் சித்தாந்தம் எதுவுமில்லை என்று காங்கிரஸ் சனிக்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளது.

நீண்ட நாட்களாக தனது அரசியல் அறிவிப்பை தள்ளிப்போட்டுவந்த ரஜினிகாந்த் , தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 2021 ஜனவரியில் அரசியல் கட்சியைத் தொடங்கப்போவதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தார்.

இதனை பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்றனர். ரஜினிகாந்த் புது கட்சி தொடங்கியதை விமர்சிக்கப்பட்டும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரஜினிகாந்தின் கட்சியின் தாக்கம் குறித்து, காங்கிரஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளது. எனினும் இப்போது எதுவும் தெளிவாக சொல்லமுடியாது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

இதுகுறித்து தமிழக விவகாரங்களுக்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான தினேஷ் குண்டு ராவ் பிடிஐயிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பாஜகவினர் பலர் இப்போது ரஜினிகாந்தோடு இணைந்துள்ளனர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெளிவாக தெரியவில்லை. ரஜினிகாந்தின் கட்சி இன்னும் பதிவு செய்யப்படவில்லை, அவரது அமைப்பின் முன்மொழியப்பட்ட சித்தாந்தமும் வேலைத்திட்டமும் தெரியவில்லை,

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தொடங்கப் போகும் கட்சி சுயாதீனமாகப் போராடுமா அல்லது தேர்தல் கூட்டணி வைத்து போட்டியிடுமா என்பது குறித்தும் தெளிவு இல்லை . அந்த தெளிவு வந்தவுடன், எங்களால் மதிப்பிட முடியும்; இப்போதே, சொல்வது என்பது மிகவும் அவசரப்பட்டு சொன்னதாக ஆகிவிடும்.

அவரது கட்சியின் அமைப்பு எப்படிப்பட்டது, அவர் சரியாக என்ன செய்யப் போகிறார், எவருக்கும் தெரியாது. அதற்குள், நாம் எப்படி அவரது கட்சியின் தாக்கம் குறித்து முன்கூட்டியே தீர்மானித்து சொல்லமுடியும். அவர் பாஜகவுடன் இருக்கப் போகிறாரா ... அவர் என்ன செய்ய விரும்புகிறார் ... அனைத்தையும் இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT