காணொலி வாயிலாக நடைபெற்ற ஐஐடி 2020 உலகளாவிய உச்சி மாநாட்டில் பிரதமர்மோடி. 
இந்தியா

உலகிலேயே தொழில்முனையும் பெருநிறுவனங்களுக்கான வரிவிகிதம் இந்தியாவில்தான் மிகவும் குறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

பிடிஐ

உலகிலேயே கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கான வரிவிகிதம் இந்தியாவில்தான் மிகவும் குறைவு என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான 'ஐஐடி 2020 உலகளாவிய உச்சி மாநாடு' வெள்ளிக்கிழமை இரவு காணொலி வாயிலாக நடைபெற்றது. உலகம் தழுவிய இம்மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:

'சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்' என்ற கொள்கையில் பணியாற்ற அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

எங்கள் அரசின் சீர்திருத்தங்களிலிருந்து எந்தவொரு துறையும் விடுபடவில்லை. விவசாயம், அணுசக்தி, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, நிதி, வங்கி, வரிவிதிப்பு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

தொழிலாளர் துறை பாதையில் தடைக்கற்களாக இருந்தவற்றை நீக்கி அதில் சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

அதில் முக்கியமானவை 44 யூனியன் தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து வெறும் நான்கு குறியீடுகளுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. உலகிலேயே பெருநிறுவனங்களுககான (Coporate tax rate) வரி விகிதம் இந்தியாவில்தான் மிகவும் குறைவாக உள்ளது.

கோவிட் -19 இன் இந்த சோதனை காலங்களில் கூட, தொழில்துறைக்கான முதலீடுகளைப் பெறுவதில் இந்தியா சாதனை படைத்துள்ளது, இந்த முதலீட்டில் பெரும்பகுதி தொழில்நுட்ப துறைக்கு கிடைத்துள்ளது.

உலகம் இந்தியாவை ஒரு நம்பகமான மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளியாக பார்க்கிறது என்பதை இது தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியா செயல்படும் விதத்தில் கணிசமான மாற்றத்தை சந்தித்து வருகிறது. ஒருபோதும் நடக்காது என்று நாம் நினைத்த பல முன்னேற்றங்கள் மிக வேகமாக நிறைவேறி வருகின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT