இந்தியா

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க நாம் அனைவரும் பாடுபடுவோம்: பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான இன்று, கீழ்க் கண்ட செய்தியை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

”மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கி, அவர்கள் அணுகுவதற்கு எளிதான, கோவிட்டுக்கு பிந்தைய உலகத்தைக் கட்டமைப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இந்த வருட இலக்கை ஒட்டி, நமது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கு வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும், அணுகலை மேம்படுத்துவதற்கும் நாம் அனைவரும் பாடுபடுவோம்.

மாற்றுத்திறனாளிகளின் உறுதியும், துணிச்சலும் நமக்கு ஊக்கத்தை அளிக்கின்றன. அணுகக்கூடிய இந்தியா இயக்கத்தின் கீழ் நமது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் வாழ்வில் நேர்மறை மாற்றத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT