இந்தியா

பசுவதை வதந்தியால் கொல்லப்பட்ட இக்லாக் குடும்பத்துக்கு நீதி வழங்கப்படும்: உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி

ஐஏஎன்எஸ்

உத்தரப்பிரதேசத்தில் பசுவதை வதந்தியால் கொல்லப்பட்ட முகம்மது இக்லாக்கின் குடும்பத்தினரை மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று சந்திந்து பேசினார். இக்லாக் குடும்பத்துக்கு நீதி வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

டெல்லிக்கு அருகே, உ.பி.யின் கவுதம புத்தர் மாவட்டம், தாத்ரி தாலுகாவில் பிசோதா என்ற கிராமம் உள்ளது. இங்கு பக்ரீத் பண்டி கையை முன்னிட்டு பசுவதை செய் யப்பட்டு, அதன் இறைச்சியை முகம்மது இக்லாக் என்பவர் உட் கொண்டதாக கடந்த திங்கள் கிழமை இரவு வதந்தி பரவியது.

இதையடுத்து ஒரு கும்பல் இக்லாக் குடும்பத்தினரை தாக்கி யது. இதில் இக்லாக் உயிரிழந்தார். அவரது இளைய மகன் தானிஷ் படுகாயம் அடைந்தார்.

இந்நிலையில் முதல்வர் அகிலேஷ் யாதவ் அழைப்பின் பேரில் இக்லாக்கின் தாயார் அஸ்கரி, சகோதரர் அப்சல், மகள் ஷாஹிஸ்தா ஆகியோர் லக்னோ சென்று அவரை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பின் அகிலேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிசோதா சம்பவத் தில் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இக்லாக் குடும்பத்துக்கு நீதி வழங் கப்படும்.

இக்லாக் குடும்பத்தினருக்கு உ.பி. அரசு சார்பில் வீடு வழங்கப் படும். குடும்ப உறுப்பினர் ஒரு வருக்கு வேலைவாய்ப்பு குறித்த கோரிக்கை வந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும்.

இக்லாக் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப் படும் என ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்தது. இது ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதுதவிர 3 சகோதரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும்” என்றார்.

இந்த சம்பவத்தில் ஏற்கெனவே 8 பேரை போலீஸார் கைது செய் திருந்தனர். வன்முறை கும்பலால் கொல்லப்பட்ட முகம்மது இக்லாக் கின் மூத்த மகன் முகம்மது சர்தாஜ் விமானப் படையின் சென்னை பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் விமானப்படை தளபதி அரூப் ராகா நேற்று முன் தினம் கூறும்போது, “இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. சர்தாஜ் சென்னையில் பணியாற்றுவதால் அவரது குடும்பத்தினரை இங்கு வர வழைப்பது அல்லது சர்தாஜ் விரும் பும் இடத்தில் பணியிடமாற்றம் வழங்குவதற்கு முயற்சி நடக் கிறது” என்றார்.

SCROLL FOR NEXT