இந்தியா

70,000 ‘பை’ மதிப்பு எண்களை கூறி இந்திய மாணவர் உலக சாதனை

பிடிஐ

ராஜஸ்தான் மாநிலம் மதோபூர் மாவட்டம் மோகோசா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்வீர் மீனா (21). வேலூர் விஐடி பல்கலைக்கழக மாணவரான அவர் கடந்த மார்ச் மாதம் 70 ஆயிரம் பை கணித மதிப்பு எண்களை நினைவுபடுத்தி கூறினார்.

கண்களை துணியால் கட்டிக் கொண்டு பை எண்களை கூறிய அவர் மொத்தம் 9 மணி நேரம் 27 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.

இது ஓர் உலகச் சாதனையாகும். அவரது சாதனை கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது. அதற்கான சான்றிதழ் கடந்த 1-ம் தேதி வழங்கப்பட்டது.

இதற்கு முன்பு சீனாவைச் சேர்ந்த லூ சா என்பவர் 24 மணி நேரம் 7 நிமிடங்களில் 67,890 பை எண்களை நினைவுபடுத்தி கூறியது உலகச் சாதனையாக இருந்தது. அதனை ராஜ்வீர் மீனா முறியடித்துள்ளார்.

ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்துக்கும் இடையே யான விகிதம் பை என்றழைக் கப்படுகிறது. இந்த வரையறையை வைத்து எந்த அளவுடைய வட்டத் தின் சுற்றளவையும் கண்டுபிடித்து விடலாம். கணிதத்தில் வரும் ஐந்து முக்கிய எண்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த எண்ணின் சிறப்பைக் கொண்டாடும் வகையில் மார்ச் 14-ம் தேதி பை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

SCROLL FOR NEXT