இந்தியா

குரூப் பி, சி, டி பிரிவு பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் நேர்காணல் ரத்து: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

பிடிஐ

குரூப் பி, சி, டி பிரிவு உள் ளிட்ட மத்திய அரசின் கீழ் நிலை பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் நேர்காணல் நடத்தப்பட மாட்டாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

அகில இந்திய வானொலியில் மாதந்தோறும் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் வானொலியில் பேசியதாவது:

கடந்த சுதந்திர தின உரையின் போது, மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தும் நடைமுறை ரத்து செய் யப்படும் என்று அறிவித்திருந் தேன். இதன்படி, உடனடியாக இதுதொடர்பான அனைத்து நடைமுறைகளும் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி (கெசட்டட்) அல்லாத குரூப் பி, சி, டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணி களுக்கு இனி நேர்காணல் நடத்தப்பட மாட்டாது. இது 2016 ஜனவரி 1-ம் தேதி நடைமுறைக்கு வரும்.

நேர்காணல் முறை ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. குறிப் பாக, வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏழை மக்களிடம் கொள்ளை அடிக்கும் போக்கு நிலவுகிறது. சில நேரங்களில் ஏழைகள் பணத்தைக் கொடுத்துவிட்டு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலையும் உள்ளது.

இந்த நிலையில்தான், கீழ் நிலை பணிகளுக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி என் மனதில் அவ்வப் போது ஓடிக் கொண்டே இருந்தது. ஓரிரு நிமிடங்கள் நடத்தப் படும் இதுபோன்ற நேர்காணல் களில் உளவியல் நிபுணர்கள் யாரும் கலந்துகொண்டதாக நான் கேள்விப்பட்டது இல்லை. எனவே தான் நேர்காணல் முறை ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசும்போது, “மத்திய அரசுப் பணிக்காக விண் ணப்பித்த ஏழை இளைஞர்கள் நேர்காணலுக்கான கடிதம் கிடைத்ததும், தனக்கு பரிந்துரை செய்யுமாறு முக்கிய பிரமுகர் களையும், தரகர்களையும் நாடுவதை பார்த்திருக்கிறேன். எனவே, கீழ்நிலை பணிகளுக்கான நேர்காணல் முறை விரைவில் ரத்து செய்யப்படும்” என்று கூறியிருந்தார்.

மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இதுதொடர்பாக மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், “கீழ்நிலை அரசு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்பட உள்ளது. ஊழலை தடுக்கவும், பணியாளர் நியமனத்தில் வெளிப் படைத்தன்மையை நிலைநாட்ட வும் குறிப்பாக ஏழை விண்ணப்ப தாரர்களின் நலனுக்காகவும் இந்த முறை ரத்து செய்யப்பட உள்ளது. எனவே, நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்கக்கூடிய பணியிடங்களை அடையாளம் கண்டு தெரிவிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது

SCROLL FOR NEXT