இந்தியா

குஜராத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஜைடஸ் கேடில்லா ஆலைக்கு பிரதமர் இன்று வருகை

செய்திப்பிரிவு

அகமதாபாத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஜைடஸ் கேடில்லாஆலையை பிரதமர் மோடி இன்றுபார்வையிட உள்ளார். இத் தகவலை மாநில துணை முதல்வர் நிதின் படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்நகரில் சன்கோதர் தொழிற்பேட்டையில் ஜைடஸ் கேடில்லா மருந்து தயாரிப்பு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு காலை 9.30மணிக்கு வருகை தரும் பிரதமர்அங்கு நிபுணர்களிடம் கரோனா தடுப்பு மருந்து குறித்த விவரங்களை கேட்டறிய உள்ளார்.

இந்நிறுவனம் கரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையில் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2-ம்கட்ட சோதனையை மேற்கொண்டு வருகிறது.

பின்னர் அகமதாபாத்தில் இருந்து புறப்படும் பிரதமர், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா மருந்து தயாரிப்பு ஆலைக்குச் செல்கிறார்.இந்த ஆலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா பார்மாவுடன் இணைந்து தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT