இந்தியா

நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆச்சரியம் அளிக்கிறது- மத்திய சட்டத் துறை அமைச்சர் கருத்து

பிடிஐ

‘‘தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது ஆச்சரியம் அளிக்கிறது’’ என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் போன்றவற்றை ‘கொலீஜியம்’ என்ற அமைப்பு கவனித்து வந்தது. அதற்கு பதில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைத்து புது சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறி நேற்று ரத்து செய்தது.

இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கவுடா நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆச்சரியம் அளிக்கிறது. கொலீஜியம் முறைக்கு பதில் தேசிய நீதிபதிகள் நியமன ஆணை யத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத் தது. இந்த நியமன ஆணைய சட்டத்துக்கு மக்களவை, மாநிலங் களவையில் 100 சதவீத ஆதரவு கிடைத்தது. 20 மாநிலங்கள் இந்த சட்டத்தை வரவேற்றன. மக்களின் விருப்பத்தை நாடாளுமன்றம் சட்டப்பேரவைகள் மூலம்தான் கொண்டுவர முடியும். வேறு எந்த வழிகளிலும் கொண்டு வரமுடியாது.

இதுகுறித்து பிரதமர் மோடி மற்றும் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.

SCROLL FOR NEXT