ஹைதராபாத் நகரில் முஸ்லிம் அமைப்பினர் கோசாலை அமைத்து பரா மரித்து வருகின்றனர்.
ஹைதராபாத் நகரில் பழைய குடியிருப்பு பகுதியான பர்கஸ் என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இணைந்து ‘அரபு கோசம்ரக்ஷனா சமிதி’ என்ற பெயரில் ஓர் அமைப்பை தொடங் கியுள்ளனர்.
இந்த அமைப்பு மூலம் கோசாலை ஒன்றை நிர்வகித்து வருகின்றனர். பசுவதையை எதிர்க்கும் இவர்கள் மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றனர்.
இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் அப்துல்லா பின் அலி கூறியதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் இந்திய முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்ணத் தொடங்கினர். சுமார் 250 ஆண்டுகளாகத்தான் இவர் கள் மாட்டிறைச்சி உண்டு வருகின்றனர். இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பிரச்சினை உருவாக்கவே ஆங்கிலேயர்கள் மாட்டிறைச்சியை அறிமுகப் படுத்தினர்.
இந்துக்களின் கலாச்சாரத் தையும் மதிக்கிறோம். இந்து முஸ்லிம் நல்லிணக்கத்துக்காக எங்கள் அமைப்பு தொடங் கப்பட்டது.
அதேநேரம் சமீபத்தில் உ.பி.யில் பசு இறைச்சி உண்டதாக பரவிய வதந்தியால் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டதை எங்கள் அமைப்பு கண்டிக்கிறது. விரைவில் இந்த அமைப்பை டெல்லியிலும் விரிவுபடுத்த உள்ளோம்” என்றார்.
இந்த அமைப்புக்கு ஹைதரா பாதில் இந்துக் களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்த அமைப்பினரை இந்துக்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கவுர வித்தனர்.