இந்தியா

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் விழா: ஹனுமன் வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலையில் தங்க ஹனுமன் வாகனத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவில் யானை வாகனத்தில் உற்சவர் பவனி வந்தார்.

ஸ்ரீராமரின் பரம பக்தரான ஹனுமனுக்கு, அவரது தாயார் பெயரில் அஞ்சனாத்திரி என ஏழு மலைகளில் ஒரு மலைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராமா யணத்தில் ஹனுமனின் பங்கு மிகவும் முக்கியமானது. இப்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலின் முகப்பு கோபுரத்தின் முன்பு, பேடி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்துதான் முதல்வர் உட்பட முக்கிய பிரமு கர்கள் ஏழுமலையானுக்கு வழங்கும் சீர்வரிசைகளை தலையில் சுமந்து கொண்டு வருவது ஐதீகம்.

இதுபோன்று ஹனுமனுக்கு பல முக்கியத்துவங்கள் உள்ளன. இதனால் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் காலை பக்த ஹனுமன் வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் உற்சவரான மலை யப்பர் எழுந்தருளி பக்தர் களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த ஹனுமன் வாகன சேவை யின்போது, பல மாநிலங் களிலிருந்து வந்திருந்த கலை குழுவினர் ராமர், சீதை, லட்சுமணன், ஹனுமன் வேடமிட்டு மாட வீதிகளில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதைக் காண திரளான பக்தர்கள் மாட வீதிகளில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். பின்னர் மாலையில் வசந்த உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை தேவி, பூதேவி சமேதமாக மலை யப்ப சுவாமி, புஷ்ப விமானத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பல வண்ண மலர்களால் மிக அழகிய புஷ்ப பல்லக்கு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. பின்னர் இரவில் கஜ (யானை) வாகனத்தில் உற்சவ மூர்த்தி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித் தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலையில் உற்சவர் கோதண்டராமர் அலங்காரத்தில் ஹனுமன் வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

SCROLL FOR NEXT