இந்தியா

தரைவழி தொலைபேசியில் இருந்து செல்போனை அழைக்க புதிய நடைமுறை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தரைவழி தொலைபேசியில் (லேண்ட்லேன்) இருந்து செல்போன்களை தொடர்பு கொள்ள வரும் ஜனவரி மாதம் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

நாடு முழுவதும் செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆதலால், அடுத்தடுத்து உருவாகும் புதிய வாடிக்கையாளர்களுக்கு செல்போன் எண்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு செல்போன் எண்களுக்கு முன்பும் பூஜ்ஜியத்தை இணைக்குமாறு மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு தொலைத்தொடர்பு ஒழுங்காற்று வாரியம் (டிராய்) நடப்பாண்டு தொடக்கத்தில் பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி, அனைத்து செல்போன் எண்களுக்கு முன்பும் பூஜ்ஜியத்தை இணைக்க தொலைத்தொடர்பு துறை தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், வரும் ஜனவரி மாதம் முதலாக தரைவழி தொலைபேசியில் இருந்து செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்பவர்கள் அந்த எண்களுக்கு முன்பு பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT