பிஹாரில் சமூக நீதியுடன் அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச் சியே நிதிஷ் குமார் தலைமை யிலான அரசின் முக்கியப் பணி யாக இருக்கும் என்று ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் சாதியை மையமாக வைத்து பிரச்சாரம் செய்துவரும் நிலையில், ஐக்கிய ஜனதா தளம் நடுநிலைமையுடன் பிரச்சாரத்தை அணுகுகிறது.
இதுபற்றி பிஹார் ஜக்கிய ஜனதா தளம் தலைவர் வசிஷ்ட நாராயண் சிங் நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, “சமூகத்தில் முன்னேறிய வகுப்பினர், பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் உள்ளனர். ஆனால் சாதியே அனைத்துமா காது. வளர்ச்சி என்பதே மிகப் பெரிய விவகாரம். பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் செய்த பணிகளை முன்வைத்து மக்களின் ஆதரவை கோருவோம்” என்றார்.
இந்தத் தேர்தல் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கும் முன் னேறிய பிரிவினருக்கும் இடை யிலான நேரடிப் போட்டி என்று லாலு கூறிவருவது குறித்து செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த வசிஷ்ட நாராயண் சிங், “அது லாலுவின் நிலைப்பாடு. ஆனால் நிதிஷ் குமார்தான் மெகாகூட்டணியின் தலைவர். இந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தால் பொது செயல்திட்டத் தின் அடிப்படையில் நிர்வாகம் நடைபெறும். தேர்தலின்போது பல் வேறு கட்சிகள் ஒன்று சேர்கின்றன. அவற்றில் சிலவற்றுக்கு சாதிய கண்ணோட்டம் இருக்கலாம். ஆனால் பிஹார் தேர்தல் வளர்ச் சியை அடிப்படையாகக் கொண்டே இருக்கும். இதைத் தவிர்த்து வேறு பார்வை கொண்ட வர்களும் வளர்ச்சி அரசியலுக்கு திரும்புவார்கள்” என்றார்.