இந்தியா

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக அலோக் நியமனம்

செய்திப்பிரிவு

தேசிய மகளிர் ஆணையத்தின் (என்சிடபிள்யூ) உறுப்பினராக அலோக் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையத்தில் ஒரு ஆண் உறுப்பினராவது இதுவே முதன் முறை.

முன்னாள் கேபினட் செயலரான அலோக் ராவத், 5 உறுப்பினர் களைக் கொண்ட தேசிய மகளிர் ஆணையத்தில் 4-வது உறுப்பின ராக ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகத்தில் முறையே இயக்கு நராகவும், இணை செயலராகவும் பணியாற்றி உள்ள அலோக் ராவத், மேலும் பல துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT