இந்தியா

பத்ரிநாத் யாத்திரைக்கு மொபைல் ஆப் வெளியீடு

செய்திப்பிரிவு

பத்ரிநாத் யாத்திரை தொடர்பான தகவல்களை அளிக்கும் மொபைல் ஆப்-ஐ உத்தராகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் நேற்று அறிமுகம் செய்தார்.

சுப பத்ரிநாத் யாத்திரை என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஆப், சமோலி மாவட்ட நிர்வாகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோஷிமத்- பத்ரிநாத் புனிதயாத்திரை தொடர்பான தகவல்களை இந்த ஆப் வழங்கும்.

இந்த ஆப்-ஐ பயன்படுத்துபவர்கள் எங்கு இருக்கிறார்கள், அங்கிருந்து பயணத்தை எப்படித் தொடர்வது என்ற தகவல்களை இந்த ஆப் வழங்கும்.

கார்வால் மண்டல ஆணையர் சந்திரா சிங் கூறும்போது, “ஏடிஎம்கள், பெட்ரோல் பங்குகள், உணவு விடுதிகள், குடிநீர், கழிப்பிடம், வாகனநிறுத்தம், பேருந்து நிறுத்தம், கார் நிறுத்தங்கள், பணிமனைகள், தட்பவெப்ப நிலை, அவசர கால உதவி, ஹெலிபேட் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். “இந்த ஆப் வெற்றி பெற்றால், யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் யாத்திரைகளுக்கும் ஆப் வெளியிடப்படும்” என முதல்வர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT