கபில் சிபல் 
இந்தியா

காங்கிரஸ் சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக இல்லை: கபில் சிபல் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து, கட்சித் தலைவர் சோனியாவுக்கு 23 மூத்த தலைவர்கள் ஏற்கெனவே கடிதம் எழுதியது சர்ச்சையானது. இந்நிலையில், பிஹார் தோல்வி தொடர்பாக மூத்த தலைவர் கபில் சிபல் கடுமையாக விமர்சித்திருந்தார். அவருக்கு மற்ற தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கபில் சிபல் கூறி இருப்பதாவது:

கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாக அறிவித்ததற்கு பிறகு இன்றுவரை புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. ஒன்றரை ஆண்டு காலமாக தலைவர் இல்லாமல் கட்சி எப்படி செயல்பட முடியும்? கட்சி எந்த வழியில் செல்கிறது என்று தொண்டர்களுக்கு தெரியவில்லை.

உத்தரபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் காங்கிரசால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

பாஜகவுடன் மோதக்கூடிய தகுதி உள்ள கட்சியாக காங்கிரஸ் கட்சி காட்டிக் கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் இப்போது சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக இல்லை. கட்சியின் நிலை தவறான இலக்கை நோக்கி செல்கிறது. அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு ஏதாவது செய்ய வேண்டும். இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

SCROLL FOR NEXT