கேரளாவில் இன்று கரோனா தொற்று 5,254 பேருக்கு உறுதிப்பட்டிருக்க, 6227 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். 4,445 பேருக்கு உள்ளூர் பரவல் மூலம் தொற்று பரவியிருக்க 662 பேருக்கு நோய்த் தொற்றின் ஆதாரம் தெரியவில்லை. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 53 மருத்துவ பணியாளர்கள் அடக்கம். இன்று கரோனா தொற்று மரணம் 27 பேர் ஆவர்.
இதன் மூலம் கரோனா இறப்பு எண்ணிக்கை 2,049 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவல்களை கேரள அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...
24 மணி நேரத்தில் மாதிரிகள்:
கடந்த 24 மணி நேரத்தில் 48,015 பேரிடம் தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 58,57,241 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக எண்ணிக்கை:
மலப்புரம் 796, கோழிக்கோடு 612, திருச்சூர் 543, எர்ணாகுளம் 494, பாலக்காடு 468, ஆலப்புழா 433, திருவனந்தபுரம் 383, கோட்டயம் 355, கொல்லம் 314, கண்ணூர் 233, இடுக்கி 220, பத்தினம்திட்டா 169, வயநாடு 153, காசர்கோடு 81. இன்று தொற்று கண்டறியப்பட்டவர்களில் 94 பேர் வெளியில் இருந்து மாநிலத்திற்குள் வந்துள்ளனர்.
மாவட்டங்களில் தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை:
மலப்புரம் 762, கோழிக்கோடு 565, திருச்சூர் 522, எர்ணாகுளம் 381, பாலக்காடு 275, ஆலப்புழா 409, திருவனந்தபுரம் 277, கோட்டயம் 353, கொல்லம் 308, கண்ணூர் 148, இடுக்கி 199, பத்தினம்திட்டா 28, வயநாடு 142, காசர்கோடு 76.
மாவட்டவாரியாக தொற்று கண்ட சுகாதாரப் பணியாளர்கள் எண்ணிக்கை:
எர்ணாகுளம் 12, திருவனந்தபுரம் 10, கண்ணூர் 6, கோழிக்கோடு 5, திருச்சூர் மற்றும் வயநாடு தலா 4, பாலக்காடு மற்றும் மலப்புரம் தலா 3 கொல்லம், பத்தினம்திட்டா மற்றும் இடுக்கி தலா 2.
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை:
திருவனந்தபுரம் 546, கொல்லம் 526, பத்தினம்திட்டா 198, ஆலப்புழா 383, கோட்டயம் 528, இடுக்கி 77, எர்ணாகுளம் 953, திருச்சூர் 417, பாலக்காடு 426, மலப்புரம் 785, கோழிக்கோடு 828, வயநாடு 121, கண்ணூர் 351, காசர்கோடு 88.
தொற்று மீண்டவர் மொத்த எண்ணிக்கை:
தற்போது, 65,856 நோயாளிகள் இந்த தொற்று நோய்க்கு சிகிச்சையளித்து வருகின்றனர், இதுவரை கரோனா தொற்றிலிருந்து மீண்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை: 4,94,664 பேர்.
முழு கண்காணிப்பில் உள்ளவர்கள்
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில்: 3,21,297 பேர் முழுமையான கண்காணிப்பில் உள்ளனர். 3,04,891 பேர் வீடு அல்லது நிறுவன தனிமைப்படுத்தலின் கீழும், 16,406 பேர் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 1,829 பேர்.
ஹாட்ஸ்பாட் பகுதிகள்:
கொல்லம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தலா ஒரு இடம் இன்று ஹாட்-ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டன, அதே நேரத்தில் ஒரு பகுதி விலக்கப்பட்டது. கேரளாவில் தற்போது 559 ஹாட்-ஸ்பாட் பகுதிகள் உள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.