தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் 23 முதல் 25-ஆம் தேதி வரை, ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தெற்கு அரபிக் கடல் பகுதியின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழை தெற்கு தீபகற்ப பகுதியில் அடுத்த சில நாட்களில் குறைந்துவிடும் எனத் தெரிகிறது.
அதன்பின்பு கிழக்கு நோக்கி ஏற்படும் புதிய அழுத்தம் காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 23 முதல் 25--ஆம் தேதி வரையும், கேரளாவில் நவம்பர் 24 முதல் 25-ஆம் தேதி வரையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.