காஷ்மீரின் சோபியான் மாவட்டம் மன்ஸிம்போரா கிராமத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு காவல் துறையினர், ராஷ்ட்ரீய ரைபிள் படையினர் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் நேற்று ஈடுபட்டனர். நேற்று மாலை 4.30 மணிக்கு பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இதில், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அடில் அகமது காண்டாய், இஸ்ரத் அகமது என அடையாளம் காணப் பட்டுள்ளனர். இருவரும் ராணுவ சீருடையில் இருந்ததாக பாதுகாப் புப் படையினர் தெரிவித்துள்ளனர்.