இந்தியா

எவ்வளவு சேற்றை வாரி இரைக்கிறீர்களோ அவ்வளவு தாமரைகள் மலரும்: மோடி பேச்சு

பிடிஐ

பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோபால்கஞ்ச், முசாபர்பூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது மோடி பேசியது:

"பிஹாரின் முதல் 3 கட்ட வாக்குப்பதிவுகள் அமைதியான முறையில் நடைபெற்றன. இந்த தேர்தல் முடியும் தறுவாயில் மெகா கூட்டணி பொறுமையை இழக்கும்.

நிதிஷ் குமார், லாலு ஆகியோருக்கு கூறிக்கொள்கிறேன், எவ்வளவு சேற்றை வரி இரைக்கிறீர்களோ அவ்வளவு தாமரைகள் மலரும்.

நான் அன்னியன் என்கிறார் நிதிஷ் குமார். இந்தியாவின் வலுவான உறுப்பாகிய பிஹார் மக்கள் வாக்களித்து பிரதமராக்கியுள்ளனர். நான் பாகிஸ்தான் பிரதமரா அல்லது வங்கதேச பிரதமரா அல்லது இலங்கை பிரதமரா?

என்னை அன்னியன் என்று அழைப்பவர் சோனியாவை அன்னியர் என்று அழைப்பாரா? தாங்கள் வகித்த பொறுப்புக்கு நியாயம் வழங்க முடியாதவர்களே இத்தகைய அரசியல் விளையாட்டுகளில் ஈடுபட்டு மக்களை திசை திருப்புவார்கள்.

ஒரு இளைஞர் நம் கட்சிக்கு வாக்களிக்கிறார் என்றால், அந்தக் கட்சி நாட்டுக்கு என்ன செய்தது என்பதை அறிய அவருக்கு உரிமை உள்ளது.

காங்கிரஸ் கட்சி பிஹாரை 35 ஆண்டுகள் ஆண்டது. லாலுஜி 15 ஆண்டுகள் ஆண்டார், நிதிஷ் குமார் 10 ஆண்டுகள் ஆடினார். மொத்தமாக 60 ஆண்டுகள் ஆண்டுள்ளனர். இந்த 60 ஆண்டுகால தங்களது ஆட்சிக்கான நியாயத்தை அவர்கள் கோர முடியுமா?

நாங்கள் ஏழை மக்களுக்கான அரசை கட்டியெழுப்ப விரும்புகிறோம். ஏழை மக்களுக்கு கடன்கள் அளிக்க விரும்புகிறோம், இதனால் அவர்கள் வளர்ச்சிக்கு இந்தக் கடன் தொகையை பயன்படுத்திக் கொள்வர்."

இவ்வாறு பேசினார் மோடி.

SCROLL FOR NEXT