சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின்போது நெரிசலில் சிக்கி இறந்த இந்தியர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
ஹஜ் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவின் மினா நகரில் கடந்த மாதம் 24-ம் தேதி சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் “மினா நகர நெரிசல் சம்பவத்தில் 58 இந்தியர்களை நாம் இழந்துள்ளோம். மேலும் 78 பேரை காணவில்லை. இவர்களை கண்டறிய, இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.