நாடு முழுவதிலும் உள்ள வேலை வாய்ப்பு பதிவு மையங்கள் அனைத்தும் விரைவில் வேலை வாய்ப்புக்கான கலந்தாய்வு மையங்களாக மாற்றப்படும் என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
இது தொடர்பாக அவர் நேற்று கொல்கத்தாவில் கூறியதாவது:
நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு பதிவு மையங்களும், தேசிய வேலைவாய்ப்பு கலந் தாய்வு மையங்களாக (என்.சி.சி.சி) மாற்றப்படும். இந்த மையம் புதிய வேலைவாய்ப்புகளை கண் டறிவதுடன், வேலை வழங்கு வோர் மற்றும் வேலை தேடு வோருக்கு தேவையான தகவல்களை அளிக்கும். இங்கு பதிவு செய்துள்ளவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கும்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் நாடு முழுவதும் 100 மாதிரி என்.சி.சி.சி.க்கள் தொடங்கப்படும்.
மத்திய அரசின் தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தையும் (என்.சி.எஸ்) மேம்படுத்தி வருகிறோம். இதில் 2 கோடிக்கும் மேற்பட்ட வேலை தேடுவோரும் சுமார் 9 லட்சம் வேலை வழங்குவோரும் பதிவு செய்துள்ளனர். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கும். இவ்விரு திட்டங் களுக்கும் மத்திய அரசு ரூ.800 கோடி முதலீடு செய்யும்.
இவ்வாறு பண்டாரு தத்தாத் ரேயா கூறினார்.