உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாகை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமைஉத்தரபிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத், உத்தராகண்ட்முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் வந்தனர். அங்கு நடைபெற்ற மறுசீரமைப்புப் பணிகள், வளர்ச்சிப்பணிகளை இருவரும் ஆய்வு செய்தனர்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கேயே தங்கினர். நேற்றுமுன்தினம் காலையில் கோயிலில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்ட பின்னர் கோயில் நடைஅடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் டேராடூனுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் அப்போது கோயிலைச்சுற்றியும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. மோசமான வானிலை காரணமாக அவர்களால் வெளியே வரமுடிய வில்லை. மேலும் பலத்த மழையும் பெய்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் 8 மணி நேரம் கோயிலுக்குள்ளேயே சிக்கி வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
பனிப்பொழிவும், மழையும் குறைந்த பின்னர், அவர்கள் டேராடூன் செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர். முன்னதாக அவர்கள் அருகில் உள்ள கவுச்சர் விருந்தினர் மாளிகையில் தங்கினர்.
நேற்று காலை 2 மாநில முதல்வர்களும் டேராடூன் சென்று உ.பி. சுற்றுலாத்துறை விருந்தினர் மாளிகை அமைப்பதற்கு அடிக் கல் நாட்டினர்.