கேதார்நாத்தில் சாரலுடன் கூடிய பனிப்பொழிவு இருந்த காட்சி 
இந்தியா

கடும் பனிப்பொழிவு: கேதார்நாத், யமுனோத்ரி கோயில்கள் மூடப்பட்டன

பிடிஐ


உத்தரகாண்ட் மாநிலம், கார்வாலில் கடும் பனிப்பொழிவு நிலவுவதையடுத்து, கேதார்நாத், யமுனோத்ரி கோயில்களில் மூடப்பட்டன

உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தேவஸ்தான அதிகாரிகள் ஆகியோர் நேற்றே கேதார்புரிக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றனர். இன்று காலை முதல் கேதார்புரியில் மழையுடன் கூடிய பனிப்பொழிவு இருந்ததால் கோயிலுக்குச் செல்வதில் கடும் சிரமம் இருந்தது.

இருப்பினும், இன்று காலை கேதார்நாத், யமுனோத்ரி கோயிலுக்குச் சென்று முதல்வர் திரேவேந்திர ராவத், ஆத்தியநாத் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அதன்பின் காலை 8.30 மணிக்கு கேதார்நாத் கோயில் நடை சாத்தப்பட்டது. பிற்பகல் 12.30 மணிக்கு யமுனோத்ரி கோயில் நடையும் சாத்தப்பட்டது.

கேதார்புரி பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்ததால் பக்தர்களால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, இருகோயில்களும் பூட்டப்பட்டன. பத்ரிநாத் கோயில் வரும் 19-ம் தேதி நடை சாத்தப்படுகிறது.

கேதார்நாத் கோயில் நடை சாத்தப்படும் மூலம் மூலவர் சிவனுக்கு சமாதி பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜை முடிந்தபின், மூலவர் அங்கிருந்து அகற்றப்படுவார் இதற்கு உத்சவ் டோலி எனப்படும். இங்கிருந்து எடுக்கப்படும் மூலவர் சிலை உக்கிமாத் பகுதியில் உள்ள ஓம்கரேஸ்வர் கோயிலில் வைக்கப்பட்டு குளிர்காலத்தில் வழிபாடு நடத்தப்படும்.

இந்த சீசனில் கேதார்நாத் கோயிலுக்கு 1,35,023 பக்தர்கள் வந்து தரிசனம் செய்துள்ளனர், யமுனோத்ரி கோயிலில் 8ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்துள்ளனர். வழக்கமாக ஜூலை மாதமே கோயில் திறக்கப்படும் ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக தாமதமாகவே திறக்கப்பட்டது.

SCROLL FOR NEXT