பிரதமர் நரேந்திர மோடி, இமாச்சலப்பிரதேசம் மண்டியில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “இமாச்சலப்பிரதேசம் மண்டியில் ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அங்கு, அரசு, மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் செய்து வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.