நாடுமுழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவாக குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,548 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 4 மாதங்களில் இல்லாத ஒன்றாகும்.
இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 88,45,127 ஆக அதிகரித்துள்ளது.
இதில் நம்பிக்கையளிக்கும் விதமாக கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 82,49,579 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 43,851
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.09சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5.44 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 435 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,30,070ஆக அதிகரித்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 12,56,98,525 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 8,61,706 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது