பிஹார் இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கு புலம் பெயர, கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லாலு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாருமே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
பிஹார் சட்டப்பேரவைக்கான 3-ம் கட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரே நாளில் பாஜக கூட்டணி சார்பில் 4 இடங்களில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் பேசினார். முதலில் சாப்ரா மாவட்டம் மராவ்ரா நகரில் பேசியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக லாலு வும் நிதிஷ் குமாரும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தனர். ஆனால் பொருளாதார வளர்ச்சிக்காக இவர்கள் எதுவுமே செய்ய வில்லை. இதனால் வேலை வாய்ப் புக்காக இளைஞர்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டனர்.
இன்னும் பெரும்பாலான கிரா மங்களில் சாலை, மின் வசதி இல்லாத நிலை நீடிக்கிறது. மொத்தத்தில் மாநிலம் பின்தங்கிய நிலையில் தொடர்வதற்கு இவர்கள் இருவரும்தான் காரணம்.
ஆனால் பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பிஹார் மாநிலத்தை வளர்ச்சி பெற்ற மாநில மாக மாற்றுவோம். குறிப்பாக, மாநிலத்தில் தொழிற்சாலைகளை தொடங்குவதற்காக முதலீட்டாளர் களின் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் மின்சாரம், குடிநீர், உள்கட்டமைப்பு, இளைஞர் களுக்கு கல்வி மற்றும் முதியவர் களுக்கு சுகாதார வசதிகள் என அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
“நான் நாட்டின் மிகப்பெரிய மந்திரவாதி” என்று லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார். எனவே, அவரது கட்சியின் பெயரை ‘ராஷ்ட்ரிய ஜாது தோன தளம்’ என்று மாற்றிவிடலாம்.
மெகா கூட்டணியில், மூத்த சகோதரர் (லாலு), இளைய சகோ தரர் (நிதிஷ்) மற்றும் சோனியா காந்தி ஆகிய 3 பேர் இருப்ப தாகவே நான் அறிவேன். ஆனால் 4-வதாக மந்திரவாதி ஒருவரும் இந்தக் கூட்டணியில் உள்ளார் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மந்திரவாதி ஒருவரிடம் ஆசி பெறு வது போன்ற வீடியோ காட்சியை பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங் வெளியிட்டார். அதில், நிதிஷின் கூட்டணியில் உள்ள லாலுவுக்கு எதிராக மந்திரவாதி ஸ்லோகம் சொல்வது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து லாலு கூறும் போது, நான் அவரைவிட மிகப் பெரிய மந்திரவாதி என கூறியிருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி நேற்று ட்விட்டரில், “இன்று பிஹாரின் மர்ஹாவ்ரா, ஹாஜிபூர், நாளந்தா, சோனா ஆகிய 4 இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன்” என கூறியிருந்தார்.