ஜார்கண்ட் மாநிலம் உருவான நாள் முன்னிட்டு ட்விட்டரில் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அத்துடன் பழங்குடித் தலைவரான பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பிஹாரிலிருந்து பிரிக்கப்பட்டு 2000 -ம் ஆண்டில் முண்டாவின் பிறந்த ஆண்டு விழாவில் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
இன்றைய ஜார்க்கண்டில் 1875 -இல் பிறந்த முண்டா பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து மிகவும் இளவயதில் போராடியவர். தனது போராட்டதிற்காக பழங்குடியினரை அணிதிரட்டிய பெருமையும் பெற்றவர். முண்டா தனது 25 வயதில் ராஞ்சி மத்திய சிறையில் உயிர்நீத்தார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
இந்திய விடுதலைப் போராட்டத்திற்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் பாடுபட்ட பிர்சா முண்டாவின் பங்களிப்பு எப்போதும் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும்.
சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவினருக்காக தொடர்ந்து போராடிய முண்டா ஏழைகள ஓர் உண்மையான மெசியாயாவாகத் திகழ்ந்தவர். அவருக்கு எனது அஞ்சலி.
ஜார்க்கண்ட் உதயமான இந்த நாளில் அம்மாநில மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் அம் மக்கள் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் பெறவும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.