தீபாவளி அன்று அகல் விளக்குகள் மற்றும் அலங்கார விளக்குகளால் ஒளிரும் டெல்லியின் ஹசரத் நிஜாமுதீன் தர்கா | படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

மதநல்லிணக்க தீபாவளி:  அலங்கார விளக்குகளால் மிளிர்ந்த டெல்லி தர்கா  

ஏஎன்ஐ

மதநல்லிணக்கத்தை உணர்த்தும்விதமாக தீபாவளியை முன்னிட்டு டெல்லியின் ஹசரத் நிஜாமுதீன் தர்கா சனிக்கிழமை மாலை அலங்கார விளக்குகளாலும் அகல் விளக்குகளாலும மிளிர்ந்தது.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி நேற்று நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதநல்லிணக்கத்தை உணர்த்தும்விதமாக டெல்லியின் ஹசரத் நிஜாமுதீன் தர்கா அலங்கார விளக்குகளாலும் அகல் விளக்குகளாலும மிளிர்ந்தது காண்போரைக் கவர்ந்தது.

இதுகுறித்து தர்கா கமிட்டியின் பீர்சாடா அல்தமாஷ் நிஜாமி கூறியதாவது:

"முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் புனித சூஃபி ஹஸ்ரத் மஹ்புப்-இ-இலாஹியை நேசிக்கிறார்கள். அதுமட்டுமின்றி தங்கள் பண்டிகைகளின் போது தர்காவுக்கு வருகிறார்கள். அப்போது அவர்கள் இங்கே அகலவிளக்குகளை ஏற்றி வணங்குகிறார்கள். தர்காக்கள் அனைவருக்குமான ஒரு இடமாக திகழ்கிறது.

தீபாவளியை முன்னிட்டு பல பக்தர்கள் தர்காவிற்கு வருகை தந்தனர். விளக்குகளை ஏற்றி, தங்கள் பிரார்த்தனைகளைச் செய்தனர்.

அகல் விளக்குகள் மற்றும் அலங்கார விளக்குகளால் ஒளிரும் தர்கா அழகாக இருக்கிறது, தீபாவளி திருவிழாவின் ஒரு பகுதியாக எங்கள் தர்காவும் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனைகளை செய்கிறார்கள். இன்று தர்காவில் மதநல்லிக்கணமான ஒரு இனிய சூழ்நிலையைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது.

இவ்வாறு தர்காவின் பிர்சாடா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT