இந்தியாவின் துரிதமாக செயலாற்றும் ஏவுகணை முக்கிய மைல்கல்லை எட்டியது.
விமானி இல்லாத இலக்கு விமானம் ஒன்றை சரியாக தாக்கியதன் மூலம் முக்கிய மைல்கல் ஒன்றை இந்தியாவின் துரிதமாக செயலாற்றும் தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணை (QRSAM) எட்டியுள்ளது.
ஒடிசா கடற்கரைக்கு அருகே ஐடிஆர் சந்திப்பூரிலிருந்து இன்று பிற்பகல் 3.50 மணியளவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
ஏவுகணையின் வெற்றிக்காக விஞ்ஞானிகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.