முடிவெடுப்பவர்கள் தேசிய நலன்களுக்கு வழிகாட்டியாக இருப்பதுடன், சர்வதேச நோக்கங்களுடன் திகழ வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காணொலி பதிவு வாயிலாக தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் 60-வது நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
ஒவ்வொரு நாடும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில்தான் உலகத்தின் இன்றைய நிலை இருக்கிறது. முடிவு எடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் தேசிய நலனுக்கு வழிகாட்டுபவர்களாக அதே போல சர்வதேச அளவிலான நோக்கங்களைக் கொண்டவர்களாக, இந்த இரண்டிலும் தகவமைத்துக் கொள்பவர்களாகவும், பன்முகத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஒரு சில நாடுகள் பின்பற்றும் விரிவாக்கக் கொள்கை உலக அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் முதிர்ச்சியான பதிலைக் கோருகிறது. இந்த பொருளில், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் இதுபோன்ற பல சவால்களை கையாளுகிறது மற்றும் எதிர்காலத்துக்கான புவியியல் ரீதியிலான அரசியல் பல்வேறு பரிமாண புவிசார் அரசியல் சிக்கல்களை கையாளக்கூடிய வகையிலான மற்றும் புவிசார் அரசியல் சூழலைப் புரிந்து கொள்ளக்கூடிய பாடங்களை பாடங்களை கல்வித்திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு தேசிய வளர்ச்சிக்கவுன்சில் வழங்குகிறது.
இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.