அந்தமான் தீவுகளில் வெள்ளிக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் குறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறியதாவது:
''அந்தமான் தீவுகளில் இன்று காலை 8.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிதமான தீவிரத்துடன் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கம் காரணமாக எந்தவொரு விபத்து அல்லது சொத்தும் சேதமடைந்ததாகத் தகவல் எதுவும் இல்லை. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் பதிவாகியுள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் நில அதிர்வு மிகவும் செயலில் உள்ள பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன''.
இவ்வாறு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.