பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பேனிக் பட்டன் களுடன் கூடிய செல்போன்களை வடிவமைப்பது தொடர்பாக, செல் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி வருவதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் பாஜகவின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு மாணவர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்நிகழ்ச்சி யில் மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி பேசியதாவது:
இளம்பெண்களின் பாதுகாப்புக் காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்து நாங்கள் ஆலோ சனைகளைக் கோரினோம். அப் போது, பிரத்யேகமாக தயாரிக்கப் பட்ட நெக்லஸ், பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட ஆபரணங் களில் இருந்து அவசரகால செய்தி கள் அனுப்புதல் உள்ளிட்ட பல் வேறு யோசனைகள் வந்து குவிந்தன.
ஆனால், நாம் ஏன் அவற்றைச் செய்ய வேண்டும். பெண்கள் என்ன கைதிகளா, அவர்கள் செல்லுமிட மெல்லாம் இந்த உபகரணங்களைக் கொண்டு செல்வதற்கு. அதுதவிர குறைவான விலையிலும் அதிக எண்ணிக்கையிலும் இந்த உப கரணங்கள் கிடைப்பதை எப்படி உறுதி செய்ய முடியும். கிராமப் பகுதி பெண்களுக்கு எப்படிக் கிடைக்கும்.
எனவே, பேனிக் பட்டன்கள் கொண்ட செல்போன்கள் குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட பேனிக் பட்டன்களுடன் கூடிய செல்போன் களை தயாரிப்பது குறித்து செல் போன் உற்பத்தி நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். சில மாதங்களில் இது அமலுக்கு வரும் என கருதுகிறேன்.
மகளிருக்கான திட்டங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் சிரமம் உள்ளது. அதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு மேனகா காந்தி தெரிவித்தார்.
அவசரகால உதவி `ஆப்’ (அப்ளி கேஷன்)களைச் செயல்படுத்து வதற்கு தாமதம் ஆகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட பட்டனை அழுத்தி னால் அது பேனிக் பட்டனாகச் செயல்படுவது சுலபமான வழியாக இருக்கும். பேனிக் பட்டன்களை அழுத்தினால் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட எண்களுக்கு, நாம் இருக்கும் இடம் பற்றிய தகவலுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும். எனவே, பேனிக் பட்டன்களுடன் வடிவமைக்கப்படும் செல்போன்கள் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.